சீமெந்து விலை அதி­க­ரிப்­பினை அர­சாங்கம் ரத்து செய்ய வேண்டும்.!

254 0

சீமெந்து விலை 30 ரூபாவால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்கம் விடுத்­துள்ள கோரிக்­கை­யினை விரைந்து ரத்து செய்­யு­மாறு தேசிய நுகர்வோர் உரி­மைகளை பாது­காப்­ப­தற்­கான தேசிய இயக்­கத்தின் தலைவர் ரஞ்சித் விதா­னகே தெரி­வித்­துள்ளார்.

சீமெந்து விலை அதி­க­ரிப்பு தொடர்பில் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு அறி­வித்­துள்ளார்.

மேலும் அவ் அறிக்­கையில்,

இலங்­கையில் சீமெந்து தயா­ரிப்பு  நிறு­வ­னங்­க­ளாக இரு பிர­தான நிறு­வ­னங்கள் செயற்­பட்­டு­ வ­ரு­கின்­றன. அதே சந்­தர்ப்­பத்தில் மேல­தி­க­மாக 24 சீமெந்து நிறு­வ­னங்­களும் இயங்கி வரு­கின்­றன. வரு­டத்­திற்கு சிறப்­பான வரு­மா­னங்­களை  ஈட்­டு­ப­வை­யா­கவும் இச் சீமெந்து நிறு­வ­னங்கள் காணப்­ப­டு­கின்­றன.

2003 ஆம் ஆண்டு நுகர்வோர் தொடர்­பான சட்­டத்தின் அடிப்­ப­டையில் நோக்கும் போது சீமெந்து விலை அதி­க­ரிப்­ப­தற்­கான நுகர்வோர் விவ­கா­ரங்கள் தொடர்­பான ஆணை­ய­கத்தில் தனது அனு­ம­தியை கோர வேண்டும். ஆனால் கடந்த  வாரத்தில் ஒல்சிம் சீமெந்தின் விலை 30 ரூபாவால் அதி­க­ரித்த விலையில் விற்­கப்­பட்டு வரு­கின்­றது. சிலரின் அர­சியல் நோக்­கத்­துக்­கா­கவே இவ்­விலை உயர்வு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

ஒல்சிம் சீமெந்து பக்கற் ஒன்­றின் விலை 930 ரூபா­வாக காணப்­ப­டு­கின்­றது. 30 ரூபாய் விலை அதி­க­ரிப்­பினால் ஒல்சிம் சீமெந்து 960 ரூபாய் அதிக விலையில் விற்­கப்­ப­டு­கின்­றது. இது நுகர்­வோரின் உரி­மை­களை மீறும் வகையில் உள்­ளன. இதனால் நுகர்வோர் சீமெந்து கொள்­வ­னவு செய்­வதில் பாரிய சிக்கலினை மேற்கொண்டு வருகின்றனர். சீமெந்து விலை அதிகரிப்பு தொடர்பில் விரைந்து தீர்மானத்தை அரசாங்கம் எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்  ளது.

Leave a comment