முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை ; அம்பாறையில் ஹர்த்தால்

247 0

முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில் போன்ற பல முஸ்லிம் பிரதேசங்களில் பூரண ஹர்த்தாலுடன், கடையடைப்பு இன்று இடம்பெற்று வருகிறது.

இதனால் குறித்த பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள், வங்கிகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், கடைகள் போன்றன மூடப்பட்டும், வைத்தியசாலைகள், அரச நிறுவனங்கள் இஸ்தம்பிதம் அடைந்தும் காணப்படுவதாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a comment