கைது செய்யப்பட் 21 பேர் பிணையில் விடுவிப்பு

376 0
அம்பாறை அட்டப்பள்ளம் பிரதேசத்தில் இந்து மயானம் அபகரிப்பு தொடர்பாக கைது செய்யப்பட் 21 தமிழ் மக்கள் தொடர்பாக இந்து சம்மேளனம் பிரதமர் காரியாலம் ஊடாக நீதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து அவர்கள் இன்று (05) நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள அட்டப்பள்ளம் பிரதேசத்தில் நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் தமிழ் மக்களுக்க சொந்தமான இந்து மயான காணியை கடந்த செவ்வாய்க்கிழமை 27 ஆம் திகதி மாற்று இனத்தவர்கள் ஆக்கிரமிக்க முற்பட்டபோது தமிழ் மக்களுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கம் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸார் கோவில் தலைவர் தம்பிமுத்து கோபாலன் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட தமிழ் மக்கள் 21 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 21 பேரையும் பிணையில் எடுப்பதற்கு எற்பட்ட நெருக்கடி தொடர்பாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இலங்கை இந்து சம்மேளனத்திடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனை அடுத்து இது தொடர்பாக பிரதமர் காரியாலத்திற்கும் அமைச்சர் ரவி கருணநாயக்காவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக நீதி அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

பின்னர் நீதி அமைச்சர், கைது செய்யப்பட்ட 21 பேரையும் பிணையில் விடுகிக்க உடனடியாக பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியதுடன் அவர்களை இன்று (05) பிணையில் விடுவிக்க சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார்.

இதனை அடுத்து அவர்கள் இன்று (05) பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment