இனம்தெரியாத தீய சக்திகள் வேண்டுமென்றே மதக் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி- விக்கினேஸ்வரன்

278 0

சிலர் வேண்டுமென்றே மதங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதத்தில் செயற்படுகிறார்கள். அவர்களின் பின்னணி பற்றியும் அறியமுடியவில்லை. மதத்தோடு சம்பந்தம் இல்லாத சிலர் மதத்தின் பெயரால் முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் சைவ ஆலயங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி அகில இலங்கை சைவ மகா சபையினரின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெற்றது. இதன் இறுதியில் முதலமைச்சரிடம் மனு ஒன்றும் வழங்கப்பட்டது இதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில்அவர் மேலும் தெரிவிக்கும் போது; இந்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை பற்றி பேசிக்கொண்டோம். இவ் விடையங்களை பற்றி நாம் ஏற்கனவே அறிந்திருக்க இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மதங்களுக்கிடையே முறண்பாடுகளையும் மக்களுக்கிடையே அமைதியின்மையையும் ஏற்படா வண்ணம் செயற்பட வேண்டும்.

ஏனைய மதத் தலைவர்களுடன் கலந்துரையாடி இதற்குரிய தீர்வை கானுவோம். சிலர் வேண்டுமென்றே மதங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதத்தில் செயற்படுகிறார்கள். அவர்களின் பின்னணி பற்றியும் அறியமுடியவில்லை. மதத்தோடு சம்பந்தம் இல்லாத சிலர் மதத்தின் பெயரால் முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றார்கள்இது ஒரு மென்மையான விடையம் இதை நாங்கள் எல்லோரிடமும் பேசியே தீர்விற்கு வரவேண்டும்.

முதற்கட்டமாக யாழ் மாவட்ட குரு முததல்வர், பங்குத் தந்தைகளை அழைத்துப் பேச உள்ளேன். மாகாண சபையில் இந்து சமைய விவகாரங்களை கையாளுவதற்கு ஒரு அலகை உருவாக்குமாறு இந்து மகா சபையினர் கேட்டுக் கொண்டனர்.

நாங்கள் அமைப்புகளை உருவாக்கலாம். ஆனால் இந்துசமய விவகாரகங்களுக்கான மாகாண சபையில் தனி அலகு ஒன்றை அமைப்பதற்கு சட்டத்தில் இடம் உண்டா, அதற்கு எவ்வாறான சட்டநீதியான வலு உண்டு என ஆராய்ந்து கூறுவதாக தெரிவித்திருக்கிறேன் எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார் .

Leave a comment