தயாமாஸ்ட்டருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

357 0

daya-masterதமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயாமாஸ்ட்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு இன்றைய தினம் வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகநேதிரன் இந்த வழக்கினை ஒத்தி வைத்து தீர்ப்பளித்துள்ளார்.

தயா மாஸ்ட்டர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான அறிக்கை சட்ட மா அதிபர் திணைக்களத்திலிருந்து அனுப்பிவைக்கப்படாமையினாலேயே இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட யுத்தத்தின் போது மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதாக தயா மாஸ்ட்டர் மீது குற்றம் சுமத்தப்படடிருந்தது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தயா மாஸ்டர் கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நான்கு அரச உத்தியோகத்தர்கள் மற்றம் ரொக்கப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.அத்துடன் வட மாகாணத்திலிருந்து வெளியேறவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தயா மாஸ்ட்டர் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டததரணியுமான எம் ஏ சுமந்திரன் மற்றும் சிரேஷ்ட்ட சட்டத்தரணி எண்டன் புனிதநாயகம் ஆகியோர் மன்றில் பிரச்சன்னமாகியிருந்தனர்.