விஷ ஊசி ஏற்றப்பட்டதான சாட்சியங்களை இதுவரை தேட முடியவில்லை – சுமந்திரன்

407 0

sumanthiran-720x480புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தை உறுதிப்படுத்துவதற்கான சாட்சிகளைத் தேடுவதற்கு இதுவரை முடியாமல் போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

100 பேருக்கு அதிகமானோர் இந்த விஷ ஊசி விடயத்தில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை 5 பேரைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.