செந்தில் தொண்டமானுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

361 0

Senthil-Digambaramஅமைச்சர் பழனி திகாம்பரத்தின் பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தினார் என கூறி ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இந்த வழக்கு இன்றைய தினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன் போது அமைச்சர் பழனி திகாம்பரம் நீதிமன்றில் பிரசன்னமாகைமையினால் இந்த வழக்கினை எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய மாகாண தேர்தலின் போது ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேளையில் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் திகாம்பரத்தின் வாகனத்தை மறித்து இடையூறு ஏற்படுத்தினர் என தெரிவித்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வழக்கிற்கு நீதிமன்றிற்கு பிரசன்னமாகாத இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் முத்தையா ராமசாமிக்கு ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் பிரசாத் லியனகே பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறவிருப்பதால் நீதிமன்றில் பிரசன்னமாக முடியாமல் போனமைக்கு வருந்துவதாக அமைச்சர் பழனி திகாம்பரம் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார்.