நாட்டில் இடம்பெறும் குற்றங்களை ஒழிக்க புதிய வேலைத்திட்டங்கள்

326 0

pujith-jayasundara_0நாட்டில் அதிகரித்துள்ள குற்றங்களின் அளவானது இந்த வருடத்திற்குள் 70 வீதமாக குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதற்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர்கள்கள் ஊடாக அனைத்து  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கசல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் தத்தமது பிரதேசங்களில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும்பொலிஸ்மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையானது அன்றாடம் பிரதேசத்தின் பொறுப்பான பொலிஸ் அதிகாரியிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதுடன்,இறுதியில் குறித்த அறிக்கை பொலிஸ்மா அதிபரிடம் சமர்ப்பிக்கபடுவதற்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் சமூகநலன்கள் மற்றும் அடிப்படை வசதிகளை கருத்திற் கொண்டு அனைத்து குற்றங்கள் தொடர்பிலும் கூடிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் என பொலிஸ்மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.