பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை

396 0

1459497513-3289மஸ்கெலிய-கவரவில பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் தனது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

சசிகுமார் கிரிசானி என்ற மாணவியே இன்று அதிகாலை 5.30 மணியளவில் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக மஸ்கெலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் தற்கொலை செய்துக் கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் தெரிவித்துள்ள பொலிஸார், இவருக்கு ஒரு சகோதரர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த மாணவியின் தந்தை வெளிநாட்டில் தொழில்புரிந்துவிட்டு அண்மையில் நாடுதிரும்பியவர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.