சீனி மூட்டைகளை கொள்ளையிட்டவர்கள் கைது

401 0

arrest-slk.polce_21பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 540 சீனி மூட்டைகளை கொள்ளையிட்டவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இரத்மலான விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்தே குறித்த சீனித் தொகை கொள்ளையடிக்கபட்டுள்ளதாகவும், இதன்பெறுமதி 2,430,000 எனப் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 33, 22, 43, 28, 30 மற்றும் 36 வயதானவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு   புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.