ஆசிய நாடுகளுள் காணப்படும் விமானநிலையங்களுள் பல குறைபாடுகளைக் கொண்ட விமானநிலையமாக கட்டுநாயக்க விமானநிலையமானது 10வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதில் நேபாளத்தின் காத்மண்டு சர்வதேச விமானநிலையமானது முதலாவது இடத்தைப் பிடித்துள்ளதாக வெளிநாட்டு இணையம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
உஸ்பெகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் விமானநிலையங்கள் முறையே 2ஆம்,3ஆம் இடங்களை பிடித்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆசிய நாட்டு விமானநிலையங்களுள் காணப்படும் பல்வேறு விடயங்களை கவனத்திற்கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு;ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த விமானநிலையங்கள் ஊடாக பயணிக்கும் பயணிகளிடம் நேர்மை மற்றும் பொறுப்பற்ற விதத்தில் விமானநிலைய அதிகாரிகள் நடந்துக்கொள்வதாகவும்,இலங்கையின் பண்டாராயக்க விமானநிலையத்தில் இவ்வாறான குறைபாடுகள் அதிகம் நிகழ்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றும் விமானநிலையத்தின் சுற்றுசூழல், மலசலகூடங்கள் தூய்மையற்ற முறையில் காணப்படுகின்றமை உள்ளிட்ட காரணங்களை மையமாக வைத்தும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு இணையம் குறிப்பிட்டுள்ளது.

