மேல் மாகாண அரச வைத்தியசாலைகளுக்கு இந்தியா உதவி

204 0

மேல் மாகாணத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைக்கு தேவையான உபகரணம் மற்றும் துணி வகைகளை வழங்குவது தொடர்பில் இந்திய நிறுவனம் ஒன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின் போது அமைச்சர் ராஜித சேனாரட்ன தலைமையில் இருதரப்பினருக்கும் இடையில் இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

குறித்த ஒப்பந்தத்தின் ஊடாக ஏழு தசம் ஐந்து மில்லியன் டொலர் பெறுமதியான உபரகணங்களை வழங்குவதற்கு இந்தியாவின் சுப்ரம் ஹொஸ்பிட்டல் சொலுசன் முன்வந்துள்ளது.

இதேவேளை வைத்திய சிகிச்சையின் பின்னரான கழிவுகளை முறையாக அகற்றுவது தொடர்பில் அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுடன் விரைவில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment