சென்னை ஐ.ஐ.டியில் சமஸ்கிருத பாடல் பாடியதில் என்ன தவறு?- எச்.ராஜா கேள்வி

209 0

மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.யில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் சமஸ்கிருத மொழியில் கடவுள் வாழ்த்து பாடியதில் என்ன தவறு? என்று எச்.ராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.

பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பூந்தமல்லியில் நம்பிகள் கோவிலை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.யில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடக்கும். அவ்வாறு நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் சமஸ்கிருத மொழியில் கடவுள் வாழ்த்து பாடியதில் என்ன தவறு?

ஒரு தோப்பில் 2 ஆயிரம் தென்னை மரங்கள் இருக்கும். நாலு மாமரங்கள் நிற்கும், இரண்டு புளியமரம் இருக்கும். ஆனாலும் அந்த தோப்பை தென்னந்தோப்பு என்றுதான் சொல்வார்களே தவிர தென்னை, மா, பலா, புளியந்தோப்பு என்று சொல்ல மாட்டார்கள்.

இந்த நாடு 85 சதவீதம் இந்துக்கள் வாழும் நாடு. இங்கு இந்து கடவுள் வாழ்த்து பாடியதை தவறு என்று எப்படி சொல்ல முடியும்?

1590 ஆதரவற்ற தமிழ் முதியவர்களின் உடல்களை கேரளத்தை சேர்ந்த பாதிரியார் தாமஸ் விற்று இருப்பது ஆதாரத்துடன் வெளிவந்துள்ளது.

தமிழர்களின் இந்த படுகொலை பற்றி கவலைப்படாதவர்கள், அதை பற்றி வாய்திறக்காதவர்கள், கல்லூரியில் நடந்த கடவுள் வாழ்த்து பாடலுக்காக வரிந்து கட்டுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?

Leave a comment