அடுத்த தேர்தலை வெற்றி கொள்ள ஜனவரி 8 வெற்றிக்கு ஒத்துழைத்த அனைவரும் ஒன்றுபட வேண்டும்

329 0

அடுத்த பொதுத் தேர்தலை வெற்றி கொள்வதற்கு ஜனவரி மாதம் 8ஆம் திகதி வெற்றிக்கு ஒத்துழைத்த அனைவரும் ஒன்றுபட வேண்டுமென்று பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து நிலையான வேலைத் திட்டத்தின் கீழ் அரசாங்கம் அடுத்து வரும் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டுமென்று இன்று காலை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் சம்பிக்க குறிப்பிட்டார்.

“கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான குழுவிற்கு கூடுதல் வாக்கை பெற்றுக் கொடுக்கவில்லை.ராஜபக்ஷவுக்கு எதிரான வாக்குகள் இரண்டாக பிளவுபட்டமையே தேர்தல் பெறுபேற்றின் மூலம் தெரியவந்துள்ளது.தற்போது நாடு முகம் கொடுக்கும் பிரச்சினைகளை துரிதமாக தீர்ப்பதற்கு அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்தார்.

Leave a comment