அரச நிறுவனங்களின் பிரதானிகளையும் மாற்ற ஜனாதிபதி தயார்- மஹிந்த

322 0

அமைச்சரவையில் மாத்திரமல்ல, அரச கூட்டுத்தாபனம், அதிகார சபைகள் உட்பட சகல அரச நிறுவனங்களின் பிரதானிகளிலும் தேவை ஏற்படின் மாற்றம் கொண்டு வர பின்நிற்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேத தெரிவித்துள்ளதாக துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த அமைச்சரவை மறுசீரமைப்புக் கூட்டத்தின் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளை சந்தித்த போது ஜனாதிபதி இதனைக் கூறியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அமைச்சுக்களின் கீழ் உள்ள பொறுப்புக்கள் சிலவற்றை மாற்றுவதற்கும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி கூறியதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஞாயிறு நடைபெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பு ஆரம்ப கட்டம் எனவும் இன்னும் ஓரிரு வாரங்களில் மீண்டும் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment