புகையிரத பாதைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க புதிய திட்டங்கள்

218 0

புகையிரத பாதைகளில் விபத்து ஏற்படும் இடங்களை அடையாளம் கண்டு அவ்வாறான விபத்துக்களைத் தடுப்பதற்காக குறுகிய கால மற்றும் நீண்டகாலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படும் என்று புகையிரத திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்ஹ தெரிவித்துள்ளார்.

குறுகிய கால பாதுகாப்பு நடைமுறையாக புகையிரதங்கள் நிறுத்தப்படும் இடங்களை குறைத்தல், புகையிரத நேர அட்டவணையில் மாற்றங்களை செய்தல் ஆகியன தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேபோன்று புகையிரத பயணிகளை தெளிவூட்டுவதற்கான ஒலிபரப்பு இயந்திரங்களைப் பயன்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புகையிரதங்கள் விசேட வர்ணங்களைப் பயன்படுத்துவதற்கும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வீதிகள் அமைக்கப்படும்பொழுது புகையிரத பாதைகளுக்கு அருகாமையில் அவை இடம்பெறாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கரையோர புகையிரத பாதையை மேம்படுத்தவும் நீண்டகாலத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a comment