வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோத்தாபய வேண்டுகோள்

316 0

தனக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டிருக்கும் வழக்கிலிருந்து தன்னை விடுதலை செய்யுமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மறுபரிசீலனை மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

அவன்கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஆயுதக் கப்பலை காலி துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கு அனுமதி வழங்கியதன் மூலம் அரசுக்கு 11.4 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட சிலருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மீள்பரிசீலனை மனு சமர்பித்துள்ளதுடன் குறித்த மனுவின் பிரதிவாதியாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment