எல்லை மீறும் மீனவர்களுக்கு எதிராக கடும் சட்டம்

332 0

எதிர்காலத்தில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டு மீனவர்களை கைது செய்து அவர்களது படகுகள் கைப்பற்றப்படும் எனவும் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு மீன்பிடி படகுகள் தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர கடந்த மாதம் சமர்ப்பித்த பிரேரணைக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சட்டமூல சரத்தின் அடிப்படையில், எதிர்காலத்தில் இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டு மீனவர்களின் மீன்பிடிப் படகுகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையும், பாரிய அபராதத் தொகையும் விதிக்கப்படும்.

அதன்படி 15 லட்சம் ரூபா முதல் ஒரு கோடி 50 லட்சம் ரூபா வரை தண்டப்பணம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment