பசிலுக்கு எதிரான வழக்கு ஜூன் வரை ஒத்திவைப்பு

340 0

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு ஜூன் மாதம் 04ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

திவிநெகும திணைக்களத்துக்கு சொந்தமான நிதியை தவறான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு அமையவே அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் திவிநெகும திணைக்களத்துக்கு சொந்தமான நிதியை தவறான முறையில் பயன்படுத்தி GI பயிப் கொள்வனவு செய்து அவற்றை உள்ளூராட்சி மன்றங்களுக்கு விநியோகித்த சம்பவம் தொடர்பிலேயே அவர்களுக்கெதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment