ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை – இலங்கை தொடர்பில் இருநாள் விவாதம்

9 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், மார்ச் 16 மற்றும் 21 ஆகிய இரு தினங்களும் இலங்கைத் தொடர்பான இரண்டு முக்கிய விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் இலங்கை பெனின், பாகிஸ்தான், சாம்பியா, ஜப்பான், உக்ரேன் ஆகிய நாடுகள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் மீதே மார்ச் 16ஆம் திகதி விவாதம் நடத்தப்படவுள்ளது.

அதேவேளை இலங்கை தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் வாய்மொழி அறிக்கை மார்ச் 21ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹுசைன் இலங்கைத் தொடர்பாக முக்கிய உரையாற்றுவார் என எதிர்ப்பார்க்ப்படுகின்றது

Related Post

இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்த பனாமா நாட்டு கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது

Posted by - April 15, 2017 0
இலங்கை கடற்பரப்பில் வைத்து தீப்பரவலுக்கு உள்ளான பனாமா நாட்டிற்கு சொந்தமான கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எம் எஸ் சீ டெனியெலா என்ற குறித்த கப்பல் இன்று…

தொழிற்சாலைகளின் நச்சுத் தன்மை வாயுக்களினால் வளி மண்டலம் பாதிப்பு

Posted by - December 19, 2016 0
இலங்கையில் உள்ள 13 ஆயிரத்து 500 தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுத் தன்மையுள்ள வாயுக்களினால் வளி மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச் சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது.…

இராணுவ மேஜர் உட்பட மூன்று இராணுவ வீரர்கள் கைது

Posted by - February 18, 2017 0
ஊடகவியலாளர் கீத் நோயார் மீது நடத்தப்பட்ட சம்பவத்தில் இராணுவ மேஜர் ஒருவர் உட்பட மேலும் இரண்டு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் புதல்வருக்கு எதிராக வழக்கு

Posted by - January 30, 2017 0
அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் புதல்வர்களில் ஒருவர் அனுமதியின்றி அரச சொத்துக்களை உடைத்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் சட்டமா அதிபரின்…

பாடப் புத்தகங்களில் எங்களுடைய வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு அல்லது மழுங்கடிக்கப்பட்டு வருகிறது- புதுக்குடியிருப்புப் பிர தேச செயலர்

Posted by - October 22, 2016 0
பாடப் புத்தகங்களில் எங்களுடைய வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு அல்லது மழுங்கடிக்கப்பட்டு வருவதாக புதுக்குடியிருப்புப் பிர தேச செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.அத்துடன், எங்களுடைய இளைய தலைமுறையினர் கலை இலக்கிய வரலாறுகளைத்…

Leave a comment

Your email address will not be published.