தீர்மானம் எடுக்க சற்று தாமதம், ஜனாதிபதியுடன் ஒரே அணியாகவுள்ளோம்- எஸ்.பி.

352 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தொடர்ந்தும் ஒரே அணியில் இருக்கும் எனவும் உரிய மாற்றங்களுடன் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் ஜனாதிபதியினால் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசாங்கத்திலுள்ள சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காததனால், மாற்று வழிமுறையில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தம்மிடம் புதிதாக மாற்றமொன்றை உருவாக்க 113 உறுப்பினர்களை விடவும் அதிகமானவர்கள் உள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க சந்தர்ப்பம் வரும் போதும் விரைவில் வெளிப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இன்று (19) காலை ஜனாதிபதியுடன்  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் மேற்கொண்ட சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை விளக்குகையில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Leave a comment