நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் விசேட விவாதம் ஒன்றுக்கான நேரத்தை ஒதுக்கித் தருமாறு கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன சபாநாயகரிடம் விடுத்த வேண்டுகோளுக்கேற்ப இன்று மாலை 4.00 மணிமுதல் அதற்கான நேரமாக ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவாதம் தற்பொழுது பாராளுமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்த விவாதத்தை ஆரம்பித்து தினேஷ் குணவர்தன எம்.பி. உரையாற்றிக் கொண்டிருக்கின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வியை ஏற்று இந்த நாட்டைக் கொண்டு செல்வதற்கான பொறுப்பை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு அவர் இந்த விவாதத்தின் போது வேண்டுகோள் விடுத்தார்.
இது உள்ளுராட்சி சபைத் தேர்தல் என மக்கள் ஆணையை குறைவாக மதிப்பிட வேண்டாம். அப்படியாக இருந்தால், ஏன் இந்த தேர்தல் பிரச்சாரத்துக்கு நாட்டுத் தலைவர்கள் சென்றார்கள். அமைச்சர்கள் அனைவரும் ஏன் சென்றார்கள் எனவும் தினேஷ் குணவர்தன கேள்வி எழுப்பினார்.

