எதிர்வரும் 14 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மின்சார சபை ஊழியர்களும் கொழும்பிற்கு வந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சார சபையின் ஊழல்களுக்கு எதிராக இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் நாட்களில் பிரதேச ரீதியாகவும் இவ்வாரான ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய சங்கத்தின் அமைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்

