2015 ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையை மதித்து தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுமாறு நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தலின் பின்னர் இடம்பெறும் முதலாவது பாராளுமன்ற அமர்வின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
தற்போது நிலவிவரும் அரசியல் நெருக்கடி நிலைமை குறித்து உரையாற்றும் போதே அமைச்சர் ரவுப் ஹக்கீம் ஜனாதிபதி மென்றும் பிரதமரிடம் மேற்படி கோரிக்கையை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

