எதிர்க் கட்சியினரே அவசரப்பட வேண்டாம், இன்னும் 2 வருடம் உள்ளது- ராஜித எச்சரிக்கை

303 0

எமது கழுத்தை பணயம் வைத்து கடந்த 2015 ஆம் ஆண்டு பெற்றெடுத்த வெற்றியை மீண்டும் ஒருபோதும் தாரைவார்க்க விடமாட்டோம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

எம்முடன் இணைந்து செயற்பட முடியுமான அத்தனை சக்திகளையும் இணைத்துக் கொண்டு, தவறுகளை சரிசெய்து எமது இந்த அரசாங்கத்தின் பயணத்தை நாம் தொடர்வோம் எனவும் சற்று முன்னர் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு விமல் வீரவங்சவின் கருத்துக்குப் பதிலளிக்கையில் குறிப்பிட்டார்.

கிராமத்தின் தேர்தல் ஒன்றுக்காக நாட்டின் அரசாங்கத்தை மாற்றிய வரலாறு உலகில் எங்கும் இல்லை. நாம் கடந்த காலத்தில் விட்ட தவறுகளை சரிசெய்து கொண்டு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு வெற்றிகரமாக முகம்கொடுப்போம்.

இதனால், எதிர்க் கட்சியினரே அவசரப்பட வேண்டாம். இன்னும் எமக்கு  2 வருடங்கள் உள்ளன. இந்த வருடம் எமக்கு எதிரான அனைத்து சக்திகளையும் மாற்றுவதற்கான வருடமாகும். இதனை சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும் பலமும் எம்மிடம் உள்ளது. இந்த இரு தலைவர்களுடனும் எமது பயணத்தை நாம் தொடர்வோம் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

Leave a comment