இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் சர்வஜன வாக்கெடுப்பு அல்லவெனவும், அவ்வாறு இதனை சர்வஜன வாக்கெடுப்பு என வாதிடுவதாயின் அக்குழு அதில் தோல்வியடைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்தார்.
தற்பொழுது பாராளுமன்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைக் கூறினார்.
இந்த தேர்தலை சர்வஜன வாக்கெடுப்பு என நிரூபிக்க முற்படின் அது அரசாங்கத்துக்கே சார்பாக அமையும். ஏனெனில், சர்வஜன வாக்கெடுப்பில் இரு அணிகள் தான் உள்ளன. ஆம், இல்லை, என்பதே அவையாகும். சர்வஜன வாக்கெடுப்பாக இதனைப் பார்ப்பதாயின் அரசாங்கமே இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

