விளைச்சலை கொள்வனவு செய்வதற்கு நெற் சந்தைப்படுத்தும் சபை தயாராக இருப்பதாக அதன் தலைவர் எம்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நெல் விளைச்சல் தொகுதிகளை கொள்வனவு செய்வதில் எதுவித பிரச்சினைகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெற்றுக் கொள்ளப்படும் நெல் தொகுதிகளை களஞ்சியப்படுத்துவதற்கும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதி உரிய மாவட்ட செயலாளர்களின் ஊடாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் திரு திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்

