ஈரான் நாட்டின் பயண்டொர் (Bayandor), நக்டி (Naghdi) மற்றும் ரொன்ப் (Tonb)ஆகிய மூன்று கடற்படைக்கப்பல்கள் இலங்கைக்கான நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டுள்ளன.
கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்த இந்தக்கப்பல்களை கடற்படையினர் கடற்படை மரியாதைகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
குறித்த கப்பலில் ஈரான் கடற்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட கடற்படையினர் வருகைதந்துள்ளனர்.
இங்கு தரித்துநிற்கவுள்ள காலப்பகுதியில் இலங்கை கடற்படையினர் ஏற்பாடுசெய்துள்ள பல்வேறு கலாச்சார நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை (19) இந்த கப்பல்கள் நாட்டை விட்டுபுறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

