தேர்தல் தினத்தன்று நாடு பூராகவும் 65,758 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள 13,420 வாக்களிப்பு நிலையங்களில் ஒரு நிலையத்திற்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்ற அடிப்படையில் 26,840 பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.அத்துடன் சகல வாக்களிப்பு நிலையங்களையும் தொடர்புபடுத்தி நடமாடும் கண்கானிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக 3225 பேர் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்கள் பலவற்றில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்த நடமாடும் கண்கானிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. இதற்காக 13,551 பேர் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் விசேட அதிரடிப்படையினரை மாத்திரம் கொண்டு 91 இடங்களில் நடமாடும் கண்கானிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது. இதற்காக 1174 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

