ஹன்ரர் ரக வாகனத்துடன் முச்சக்கர வண்டி மோதி கோர விபத்து! இருவர் ஸ்தலத்தில் பலி!!

342 0

புலத்சிங்கள மதுகம வீதியில் தல்கஸ்கந்த, பகலவெல்கம பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேன் ஒன்றுடன் முச்சக்கர வண்டி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி உட்பட முச்சக்கர வண்டியில் பயணித்த 4 பேரும் பலத்த காயங்களுடன் புலத்சிங்கள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் சந்தர்பத்தில் சாரதியும் மற்றொருவரும் உயிரிழந்துள்ளனர்.

கலவெல்கமவை சேர்ந்த 31 மற்றும் 41 வயதானவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.இவ்விபத்து தொடர்பாக வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் புலத்சிங்கள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment