நுவரெலியா மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளுக்கு 2 ஆயிரத்து 230 பேர் போட்டி

289 0

நுவரெலியா மாவட்டத்தில் 12 உள்ளுராட்சி சபைகளுக்கு 299 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 2230 பேர் போட்டியிடுகின்றனர். 561725 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நடைபெறவுள்ள இந்த தேர்தலில் இவர்கள் 504 வாக்குச் சாவடிகளில் இந்த வாக்குகளை அளிக்கவுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் ஒரு மாநகர சபையும் இரு நகரசபையும் ஒன்பது பிரதேச சபையுமாக மொத்தமாக 12 உள்ளுராட்சி சபைகள் உள்ளன.

இந்த மாவட்டத்தின் உள்ளுராட்சி சபைகளில் அதிக உறுப்பினர்களை கொண்ட சபையாக கொத்மலை பிரதேச சபை அமைந்துள்ளது.

இங்கு மொத்தமாக 56 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றார்கள்.(82139 வாக்காளர்கள்)சிறிய  சபையாக தலவாக்கலை – லிந்துலை நகர சபை அமைந்துள்ளது.இங்கு 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றார்கள். (3933 வாக்காளர்கள்)

Leave a comment