இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு விசாரணையில் தசநாயக்க கோரிக்கை!

312 0

11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கில் முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி தசநாயக்க உள்ளிட்ட நபர்களுக்கு எதிரான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து விலக்கிக்கொள்ளுமாறு நீதிமன்றில் கோரப்பட்டுள்ளது.

கொழும்பு – கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று வழக்கு தவணை அழைக்கப்பட்ட போது பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இந்த கோரிக்கைக்கு சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணியால் கடும் எதிர்ப்பு வௌியிடப்பட்டிருந்த நிலையில் அதன் படி பிரதிவாதி சட்டத்தரணியின் கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் 22 ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதவான் அறிவித்துள்ளார்.

Leave a comment