சட்டவிரோத மீன்பிடி – 23 பேர் கைது

317 0

fishingசட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 23 உள்ளூர் மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படை ஊடக பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி இதனை தெரிவித்தார்.

கற்பிட்டி மற்றும் குச்சவெளி கடற்பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட மேலும் சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் குச்சவெளி காவற்துறை நிலையம் மற்றும் கற்பிட்டி மீன்பிடி பரிசோதகர் காரியாலயத்திடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.