“விலகுங்கள்; அல்லது விலக்குவோம்”-கம்மன்பில

2 0

பிணைமுறி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையைச் சுட்டிக் காட்டி, பிரதமர் பதவி விலக வேண்டும் அல்லது நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் விலக்கப்படுவார் என்று ‘பிவித்துரு ஹெல உருமய’ கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில், நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கலந்துகொண்டார்.

“பிணைமுறி வழங்கலில் மத்திய வங்கி முன்னாள் தலைவர் அர்ஜுன மகேந்திரன் தலையிடவில்லை என 2015ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் திகதி பாராளுமன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருப்பதாக அறிக்கையின் 854ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இது உண்மைக்குப் புறம்பானது.

“இவ்வாறான தவறான தகவல்களைத் தெரிவித்து பாராளுமன்றை பிழையாக வழிநடத்திச் சென்றிருக்கிறார் பிரதமர். இதற்கான தார்மீகப் பொறுப்பை ஏற்று அவர் பதவி விலக வேண்டும். இல்லையேல், அவருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து பதவி விலகச் செய்வோம்.

“அவருக்கெதிரான பிரேரணையைக் கொண்டுவருவதற்கு, மேற்படி அறிக்கையில் அவர் தெரிவித்திருக்கும் கூற்றே போதுமானது.”

இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Related Post

யாசகர் வேடத்தில் மறைந்திருந்த 16 சந்தேக நபர்கள் ​கைது

Posted by - December 12, 2016 0
மாத்தளை நகரத்தில் யாசகர் வேடத்தில் சுற்றித் திரிந்த குற்றவாளிகள் 16 பேர், மாத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வித்தியாசமான விலைகளில் பெற்றோல் விற்பனை செய்வதனால் சிக்கல் – ஐ.ஓ.சி

Posted by - October 15, 2018 0
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இந்திய எண்ணெய் நிறுவனமும் (ஐ.ஓ.சி) நிறுவனமும் வித்தியாசமான விலைகளில் எரிபொருள் விற்பனை செய்வதனால் நுகர்வோர் மாத்திரமன்றி எரிபொருள் விற்பனையாளர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து…

வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து தேசிய அரசாங்கத்தை கவிழ்ப்போம்-வாசுதேவ

Posted by - October 2, 2018 0
தேசிய அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து, தேசிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான மறைமுக நடவடிக்கைகளை பொது எதிரணி முன்னெடுத்து வருவதாக அதன்  செயற்பாட்டாளர் பாராளுமன்ற…

கடந்த ஆட்சியில் பலகாயாக்களை உருவாக்கி சிங்கள-முஸ்லிம் மோதலை தூண்டினர்- ரங்கே பண்டார

Posted by - December 31, 2018 0
அதிகாரத்தை இழந்த குழு நாட்டில் இனங்களுக்கிடையில் மோதலை மீண்டும் ஏற்படுத்தி அரசாங்கத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார…

புதையல் தோண்டிய நால்வர் கைது

Posted by - January 26, 2019 0
கிரிதிவெல – குருதிய – ஹிஸ்வெல்ல பிரதேசத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த 04 பேர் பொலிஸ் விசேட அதிரடிபடையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் கிடைக்க பெற்றுள்ள…

Leave a comment

Your email address will not be published.