மைத்திரியின் நாடகம் மிகச்சிறப்பானது.! -மஹிந்த

1 0

ஜனாதிபதியின் நாடகம் இன்று மிகச்சிறப்பாக அரங்கேற்றப்பட்டு வருகின்றது. ஊழல் வாதிகளை தண்டிப்பதாக மேடையில் சவால் விடுத்தாலும் அமைச்சரவையில் ஊழல் வாதிகளுடன் கைகோர்த்தே ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.  கோதபாய ராஜபக் ஷவின் வேலைத்திட்டங்களை இலங்கை மக்கள் எவரும் மறந்துவிடக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டதின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கடந்த காலங்களில் கொழும்பு மிகவும் அழகான பராமரிக்கப்பட்டது. எமது ஆட்சியில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் செயற்திட்டங்ககளின் கீழ் மிகச்சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. கோத்தாபய ராஜபக் ஷவின் வேலைத்திட்டங்கள் எதையும் இலங்கை மக்கள்  எவரும் மறந்துவிடக்கூடாது. எனினும் இன்று கொழும்பின் நிலைமை மிகவும் மோசமானதாக உள்ளது. அபிவிருத்திகள் அனைத்துமே தடைப்பட்டுள்ளது. சரியான வழிநடத்தல் ஒன்று இல்லாமையே இதற்குக் காரணமாகும். ஆகவே இப்போது மக்கள் எடுக்கும் தீர்மானமே அடுத்த கட்டமாக நாட்டை சரியான  பாதையில் கொண்டுசெல்ல ஆரம்பமாக அமையும். மக்கள் விட்ட தவறை சரிசெய்யும் இன்னொரு வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது. அதில் மக்களின் தீர்மானமே நாம் எமது போராட்டத்தை அரசாங்கத்திட்கு எதிராக மாற்றியமைக்கவும் அடிப்படையாக அமையும் எனவும்  அவர் குறிப்பிட்டார்.

Related Post

நல்லிணக்க பிரசாரம் தமிழர்களுக்கு மாத்திரம் அறிவுரை கூறுவதாக இருக்கக் கூடாது!

Posted by - February 22, 2018 0
நல்லிணக்க தமிழ் தொலைக்காட்சி, தெற்கில் இருந்து வடக்கிற்கு மாத்திரம் நல்லிணக்க பிரச்சாரங்களை கொண்டு செல்லும் ஒருவழி பாதை ஊடகமாக இருக்கக் கூடாது. இருக்கவும் முடியாதென முற்போக்கு கூட்டணி…

கல்பிட்டியில் 60 அடி நீள திமிங்கலம் கரையொதுங்கியது

Posted by - October 18, 2017 0
சுமார் 60 அடி நீளமான திமிங்கலம் ஒன்று கல்பிட்டி – கந்தகுழி கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளது. அந்த திமிங்கலம் நேற்று இரவு 7 மணியளவில் கரையொதிங்கியதாக கல்பிட்டி காவல்துறையினர்…

அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கம்

Posted by - October 7, 2017 0
நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக தென்மேற்கு பிரதேசங்களில் வாழ் மக்கள் மண்சரிவு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்த அறிவுறுத்தலை…

உழுந்து இறக்குமதி வரி அதிகரிப்பு

Posted by - June 26, 2018 0
மேலதிக உணவுப்பயிருக்குட்பட்ட முக்கிய உணவுப்பொருளாக கருதப்படும் உழுந்து இறக்குமதியை வரையறுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இது தொடர்பில் விசேட வர்த்தக பொருட்களுக்கான வரியை அதிகரிப்பதற்கு சமீபத்தில் நடைபெற்ற வாழ்க்கைச்செலவுக்குழு…

Leave a comment

Your email address will not be published.