மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ரவி விசேடி உரை

2 0

மத்திய வங்கி பிணைமுறி மோசடி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலும் அவரது தீர்மானம் தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணநாயக்க ஜனவரி 24 ஆம் திகதி விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி உரையாற்றவுள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் என்ற வகையில் ரவி கருணாநாயக்கவிற்கு கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கூட்டு எதிரணியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமுள்ளன.

அத்துடன் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசார கூட்டங்களுக்கு ரவி கருணாநாயக்க வருகை தந்தாலும் அவரது உரையாற்ற அனுமதி வழங்கப்படுவதில்லை. மத்திய வங்கி மோசடியை அடிப்படையாக கொண்டு ரவி கருணாநாயக்க தனது அமைச்சு பதவியையும் இராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையில் இலங்கை மத்திய வங்கி பிணைமுறி வழங்கல் தொடர்பிலும் இது தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஜனவரி 24 ஆம் திகதி விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Related Post

4 ஆயிரம் பேர் தொடர்ந்தும் முகாம்களிலேயே

Posted by - June 23, 2017 0
இந்த மாத ஆரம்பத்தில் நிலவிய கடும் மழையுடனான காலநிலையால் இடம்பெயர்ந்தவர்களுள் 4 ஆயிரத்து 2 பேர் இன்னும் முகாம்களிலேயே வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் இதனைத்…

விடுதியொன்றில் இருந்து சடலம் மீட்பு

Posted by - August 25, 2016 0
கொட்டாஞ்சேனை – ஆமர் பாபர் வீதியில் உள்ள விடுதியொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீடகப்பட்டவர் சில தினங்களுக்கு முன்னர் மரணித்திருக்கலாம் என காவல்துறையினர்…

மழை இன்று குறைவடைந்தாலும் நாளை அதிகரிக்கும்

Posted by - September 8, 2017 0
நாட்டின் தென்மேற்கு பகுதிகள் உள்ளிட்ட பல மாகாணங்களில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று குறைவடைந்த போதிலும் நாளை அதிகரிக்கலாம் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. பெய்துவரும்…

ஆவா குழுவுடன் தொடர்புடைய மேலும் நால்வர் கைது

Posted by - November 30, 2016 0
ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கும் மேலும் 4 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவா குழுவைச் சேர்ந்த நபர் ஒருவருடன் தொடர்புகளைக் கொண்டிருந்த சந்தேகத்திலேயே இந்த…

மஹிந்தவுக்கு இன்றும் பலர் அஞ்சுகின்றனர்.!-மஹிந்த அமரவீர

Posted by - September 1, 2017 0
மஹிந்த ராஜபக் ஷவை கண்டு இன் றும் பலர் அஞ்சுகின் றனர். பல ஊடகங்கள் இன்றும் மஹிந்த ராஜபக் ஷ மீதான அச்சத்திலேயே செய்திகளை நிராகரித்து வருகின்றன என்று…

Leave a comment

Your email address will not be published.