முதலாம் தரத்திலிருந்து ஆங்கிலப்பாடம் அறிமுகம்

1 0

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கையில் உள்ள மாணவர்களின் மொழி ஆற்றலை விருத்தி செய்வதற்கான  வேலைத்திட்டம் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் காணப்படும் சகல மொழி மூலமான பாடசாலைகளிலும் முதலாம் தரத்திலிருந்து ஆங்கிலப்பாடத்தை கற்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மாணவர்களிடத்தில் ஆரம்பத்திலிருந்தே மொழி ஆற்றலை விருத்தி செய்வதை நோக்காகக் கொண்ட இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அரச பாடசாலைகளில் தரம் ஒன்று மற்றும் இரண்டுக்குரிய வகுப்புக்களில் ஆங்கில பாடத்தை அறிமுகம் செய்வதற்கு கல்வி அமைச்ச தீர்மானித்துள்ளது.

இவ்வாறு ஆரம்ப வகுப்புக்களில் ஆங்கில பாடவிதானத்தை கற்பதற்கு தேவையான பாடப்புத்தங்களை அச்சிட்டு விநியோகிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி வெளியீட்டு ஆணையாளர் தெரிவித்துள்ளார். இத்திட்டம் இவ்வாண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது. எனினும் அடுத்த ஆண்டு முதல் முழுமையாக அமுல் படுத்துவதற்கான செயற்திட்டங்கள் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளன.

விஷேட செயற்திட்டங்கள் மூலம் முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலக்கல்வி கற்பிக்கப்படவுள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கு விஷேட பயிற்சி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிட்டத்தக்கதாகும்.

Related Post

கைப்பேசியை காதில் வைத்து புகையிரதத்தை கண்டும் அசட்டையாக சென்ற சாரதி : ஒருவர் பலி – மூவர் காயம்

Posted by - December 22, 2017 0
நீர்கொழும்பு – கட்டுவ பிரதேசத்தில் பயணிகள் புகையிரதத்தில் மோட்டார் வாகனம் ஒன்று மோதியதில் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த மூன்று பேர்…

நோர்தன் பவர் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு  தள்ளிபடி 

Posted by - September 19, 2017 0
சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடவு தொடர்பாக, நோர்தன் பவர் தனியார் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளிபடி செய்தது. நீர்மாசடைதலினால் பாதிக்கப்பட்ட…

மஹிந்தவிடம் மீண்டும் நாட்டை பொறுப்பளிப்பது நகைப்புக்குரியது – ரில்வின் சில்வா

Posted by - October 21, 2018 0
ரூபாவின் வீழ்ச்சியினை கட்டுப்படுத்த எம்மால் முடியும் என்று குறிப்பிடும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது தரப்பினரிடம்  அவ்வழிமுறையினை வினவும்போது

மொரட்டுவை பல்கலையில் 15 இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிப்பு

Posted by - July 4, 2017 0
மொரட்டுவை பல்கலைக்கழக வளாகத்தில் டெங்கு குடம்பிகள் காணப்பட்ட 15 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பகிடிவதை முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட அலுவலகம்

Posted by - August 12, 2018 0
பகிடிவதை சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட அலுவலகமும் தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதை, மாணவர் வன்முறை…

Leave a comment

Your email address will not be published.