நேபாள இராணுவ பதவிநிலைப் பிரதானி – ஜனாதிபதி சந்திப்பு

2 0

இலங்கையுடனான உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் நாட்டிற்கு வருகைதந்துள்ள நேபாள இராணுவ பதவிநிலைப் பிரதானி ஜெனரல் ராஜேந்திர சேத்ரி (General Rajendra Chhetri) இன்று (19) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.

தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் இரு நாட்டு இராணுவங்களினதும் பங்களிப்பு, தேசிய இடர் முகாமைத்துவ செயற்பாடுகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்கான இருதரப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

விசேடமாக நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட மோசமான பூமி அதிர்ச்சியின்போது இலங்கை இராணுவத்தினரால் வழங்கப்பட்ட துரித உதவிகள் மிக உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டதாக குறிப்பிட்ட நேபாள இராணுவ பதவிநிலைப் பிரதானி, நேபாள அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையே நீண்ட காலமாக நிலவிவரும் சமய, கலாச்சார, மற்றும் சமூக தொடர்புகளை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் அந்த தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இருநாட்டு இராணுவத்தினரிடையே பயிற்சி மற்றும் தொழினுட்ப அறிவினை பரிமாறிக்கொள்ளும் செயற்பாடுகள் விரிவுபடுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தினை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விசேடமாக பாரிய அனர்த்த நிலைமைகளின்போதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைளிலும் அது மிகுந்த முக்கியத்துவம் உடையதாக காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

சந்திப்பினை நினைவுகூரும் வகையில் நினைவுப் பரிசுகளும் இதன்போது பரிமாறப்பட்டன

Related Post

எட்கா குறித்து இலங்கையும், இந்தியாவும் மீண்டும் பேச்சுவார்த்தை!!

Posted by - December 31, 2016 0
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்துக்கொள்ளப்படவுள்ள எட்கா பொருளாதார உடன்படிக்கை குறித்து இரண்டு நாட்டு அதிகாரிகளும் மீண்டும் சந்திக்கவுள்ளனர்.

ரணிலுக்காக நாளை சபையில் 2 மணி நேர விவாதம்

Posted by - August 3, 2017 0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 வருட பாராளுமன்ற வாழ்வுக்கு வாழ்த்துக் கூறும் வகையிலான விவாதமொன்று நாளை (04) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விவாதத்தில் அரசாங்கத்துடன் ஒட்டியுள்ள…

10,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு

Posted by - January 15, 2017 0
எதிர்காலத்தில் நாட்டில் செய்யப்படும் முதலீடுகள் ஊடாக உருவாகும் தொழில் வாய்ப்புகளுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிரோஸன் பெரேரா…

சரத் பொன்சேகாவுக்காக புதிய பதவி குறித்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ள குழு நியமிக்க தீர்மானம்

Posted by - May 3, 2017 0
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையில் நிறுவப்படவுள்ள பிரிவு குறித்த இறுதித் தீர்மானமொன்றை எடுக்க குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக்…

Leave a comment

Your email address will not be published.