இலங்கைக்கு அமெரிக்கா183 மில்லியன் ரூபா நிதி உதவி

214 0

சட்ட விரோதமாக வெளிநாடுகளில் குடியேருவோரை தடுப்பதற்காக இலங்கைக்கு 183 மில்லியன் ரூபாவை வழங்க அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சுட்ட விரோதமாக குடியேற முயற்சிப்போரை தடுப்பதற்கான புதிய வேலைத்திட்டத்தை “Equipping Sri Lanka to Counter Trafficking in Persons” (EQUIP) நடைமுறைப்படுத்துவதற்காக இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா இராஜாங்க அமைச்சின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவலகள் தொடர்பான பணியகத்தின் மூலம் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாலைத்தீவு அலுவலகத்திடம் இந்த நிதியுதவி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் இலங்கைக்கு தொடர்ந்தும் நிதியுதவி வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment