இலங்கை முன்னேற்றம் – அமெரிக்கா பாராட்டு

285 0

a127ஜனநாயக உரிமைகள் நல்லிணக்கம், சட்ட ஒழுங்கு மற்றும் பேச்சு வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பவற்றில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான நிகழ்வின் போது, அமெரிக்க தூதுவர் அடுல் கெஷாப் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புக்களையும் புதிய கைத்தொழில்களையும் புதிய தொழில்களையும் ஏற்படுத்தி கொடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

நல்லிணக்கமும் பொருளாதார வளர்ச்சியும் இணைந்து செல்வது எவ்வாறு என்பது தொடர்பில் இலங்கை சர்வதேசத்திற்கு உதாரணத்தை காட்டிக்கொண்டிருப்பதாகவும் அடுல் கொஷாப்; குறிப்பிட்டார்.

அமெரிக்காவும் இலங்கையும் தமக்கிடையிலான பொருளாதார உறவை பலப்படுத்தியுள்ளன.

இது இலங்கையின் வர்த்தக, முதலீடு, வெளிநாட்டு நேரடி முதலீடுகள், பொருளாதார நன்மைகள் என்பவற்றை இலங்கை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க உதவி வர்த்தக பிரதிநிதி மைக்கல் டெலானே நிகழ்வில் உரையாற்றும் போது, அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளால் இலங்கையில் பல்லாயிரக்கணக்கானவர்கள் தொழில்களை பெறுவர் என குறிப்பிட்டார்.

இலங்கையின் தேசிய நல்லிணக்கமானது பொருளாதார விருத்தியையும் தொழில்வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுக்கும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.