பாதாள உலக குழுத் தலைவர் மஹகந்துரே மதுஷவுடன் தொடர்பில் இருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் மேலும் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹகந்துரே மதுஷ தற்போது வெளிநாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பிரிவினர் அவர்களை கைது செய்துள்ளனர்.
குறித்த அதிகாரிகளும் ஸ்ரீ ஜயவர்தனபுர விசேட அதிரடிப் படையினரும் நீர்கொழும்பு தாகொன்ன பகுதியில் வீடோன்றில் அவர்கள் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று மதியம் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கைக் குண்டுகள், ஹெராயின் மற்றும் கேரள கஞ்சா என்பன மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இன்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

