மாகாணசபை உறுப்பினர் பதவியை துறந்து மாநகர சபையில் போட்டியிடும் சண்.குகவரதன்!

11192 10

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாந­கர சபைக்­கான தேர்­த­லில் தமிழ் முற்­போக்­குக் கூட்­ட­ணி­யின் உறுப்­பி­னர் சண்.குக­வ­ர­தன் மேயர் வேட்­பா­ள­ரா­கக் கள­மி­றங்­கி­யுள்­ளார். இதற்­காக மேல் மாகாண சபை உறுப்­பி­னர் பத­வி­யி­லி­ருந்து வில­கி­யுள்­ளார்.

கொழும்பு மாந­கர சபை­யின் ஊடாக தனது அர­சி­யல் பய­ணத்தை ஆரம்­பித்த குக­வ­ர­தன், திட்­ட­மி­டல் குழு­வின் தலை­வ­ரா­க­வும் செயற்­பட்­டார். அதன்­பின்­னர் மாகாண சபைத் தேர்­த­லில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றார் என்­பது குறிப்­பி­டத் தக்­கது.

கடந்­த­முறை நடை­பெற்ற கொழும்பு மாந­கர சபைக்­கான தேர்­த­லில் தனித்­துப் போட்­டி­யிட்ட ஜன­நா­யக மக்­கள் முன்­னணி 6 ஆச­னங்­க­ளைக் கைப்­பற்றி ஆட்­சி­யைத் தீர்­மா­னிக்­கும் சக்­தி­யாக உரு­வெ­டுத்­தி­ருந்­தது.

Leave a comment