கோத்தா மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை!!-சரத் அமுனுகம

267 0

கோத்தபாய ராஜபக்ச மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டுக்களும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும், அமைச்சருமான சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (27) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்ய முயற்சிகள் இடம்பெறுவதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என்றும் அவர் மேலும் கூறினார்

Leave a comment