தமிழ், சிங்கள மாணவர்களிடையே பதற்றம்!! யாழ் பல்கலை வவுனியா வளாகம் மூடப்பட்டது!

246 0

யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பம்பை மடு விடுதியில் தங்கியுள்ள முதலாம் வருட மாணவர்கள்  பிரபாகரனின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியுள்ளமையால் முரண்பட்டுக்கொண்ட சிங்கள மாணவாகள்

முதல்வரிடம் முறையிட்டதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் குறித்த மாணவாகளுக்கு பங்கம் ஏற்படும் வகையிலும் செயற்பட்டு வருவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பம்பைமடு விடுதியில் தங்கியுள்ள முதலாம் வருட மாணவர்கள் நேற்று பிரபாகரனின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

தமது விடுதியில்  இடம்பெற்ற இந் நிகழ்வை முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்திருந்தனர். இதனை அவதானித்த சிங்கள மாணவர்கள் பிறந்தநாள் கொண்டாடியவர்களுடன் முரண்பட்டு கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் விடுதி மேற்பார்வையாளர் இ ரு பிரிவினரையும் சமரசம் செய்து வைத்துள்ளார்.  எனினும் இரவு 10.30 மணியளவில் தனியார் பேரூந்தொன்றில் பூங்கா வீதியில் அமைந்துள்ள வளாகத்தின் நிர்வாக தொகுதிக்கு வருகை தந்த சிங்கள மாணவர்கள் அனைவரும் வளாகத்தின் முதல்வரிடம் இவ் விடயம் தொடர்பாக முறையிட்டதுடன் கேக் வெட்டிய மாணவர்களை வவுனியா வளாகத்தில் இருந்து இடை நிறுத்த வேண்டும் எனவும் அவர்களால் சிங்கள மாணவர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாவும் முறையிட்டுள்ளனர்.

இந் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதாக முதல்வர் தெரிவித்ததையடுத்து மாணவாகள் மீண்டும் பம்பைமடு விடுதிக்கு சென்றிருந்ததுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மற்றும் வளாகத்தின் உத்தியோகத்தர்கள் விரிவுரையாளர்களும் வீடு திரும்பியிருந்தனர்.

எனினும் சிங்கள மாணவர்கள் கேக் வெட்டிய தமிழ் மாணவர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளதத்தில் பதிவேற்றி இன ரீதியான வேற்றுமையை தோற்றுவிக்கும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந் நிலையில் இச்சம்பவத்தினால் குறித்த தமிழ் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதனால் குறித்த மாணவர்கள் அச்சம் கொண்டுள்ளதுடன் தமது பாதுகாப்பு தொடர்பாகவும் வளாக நிர்வாகத்திடம் முறையிடவுள்ளதாக தெரிவித்தனர்.
இதேவேளை வடக்கு கிழக்கு பூராகவும் பிரபாகரனுக்கு கேக் வெட்டி கொண்டாடியபோது குறித்த சில மாணவாகள் வவுனியா வளாகத்தில் கேக் வெட்டியதை சிங்கள மாணவாகள் பூதாகரமானதாக மாற்றும் எண்ணத்துடன் செயற்படுவதாகவும் இச் செயற்பாடுகள் தமிழ், சிங்கள மாணவர்களிடையே முரண்பாடுகளை அதிகரிக்கும் வாய்ப்புள்ளமையால் வளாகத்தின் நிர்வாகம் தகுந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என வவுனியா மாவட்ட சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment