மாலபே மருத்துவ கல்லூரி – போராட்டங்கள் அடிப்படை அற்றது – கெமுனு விஜேரத்ன

287 0

1272820470Malapeமாலபே தனியார் மருத்துவ கல்லூரியை மூடுமாறு மேற்கொள்ளப்படும் போராட்டங்களில் எந்த அடிப்படையும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாலபே தனியார் பல்கலைக்கழக பெற்றோர் அமைப்பின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

மாலபே தனியார் மருத்துவமனைக்கு எதிராக 6 மருத்துவ பீட மாணவர்கள் சத்தியாகிரக போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

நேற்றைய தினம் குறித்த மாணவர்களின் பெற்றோர்களும் சத்தியா கிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.