தமக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டால், அரசியலில் ஈடுபட தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி டி பி விஜயதுங்கவின் மகள் தெரிவித்துள்ளார்.
கண்டி பிலிமதலாவ பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
தாம் அரசியலுக்கான தகுதியை கொண்டிருக்காதுவிட்டாலும் மக்கள் பணிகள் தொடர்பில் போதுமான தகுதியை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொய் கூறுவதற்கும் மக்களை ஏமாற்றுவதற்கும் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்வதற்கும் மக்களின் வாக்குகளை பெற அதிக பணம் செலவழிப்பதற்கும் தாம் பழக்கம் எதனையும் கொண்டிருக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

