தகவலறியும் சட்ட ஆணைக்குழுவுக்கு, இவ்வாண்டில் 438 மேன்முறையீடுகள்!

277 0

அரச திணைக்களங்களால் தகவலறியும் சட்டம் (RTI) மீறப்படும் போது, அது தொடர்பாகத் தலையிடும் தகவலறியும் சட்ட ஆணைக்குழுவுக்கு, இவ்வாண்டில் 438 மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என, ஆணைக்குழுவின் வருடாந்த செயற்றிறன் அறிக்கை தெரிவிக்கிறது.

ஆணைக்குழுவால் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, இவ்வாறு கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகளில் 218 மேன்முறையீடுகளை ஏற்பதில்லை என, ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அந்த மேன்முறையீடுகள் அல்லது கோரிக்கைகளில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சரியான முறையில் முன்வைக்கப்பட்ட 220 அறிக்கைகளை, ஆணைக்குழு கருத்திலெடுத்துள்ளது.

இதன்படி, 98 மேன்முறையீடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன; பட்டிலிடப்பட்ட மேன்முறையீடுகளாக 34 மேன்முறையீடுகள் காணப்படுகின்றன; காத்திருக்கும் மேன்முறையீடுகளாக, 122 காணப்படுகின்றன.

நிறைவுசெய்யப்பட்டு, தகவல்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவே வெளியிடப்பட்ட மேன்முறையீடுகளாக, 37 மேன்முறையீடுகள் காணப்படுகின்றன.

Leave a comment