சம்­பந்­தனின் கோரிக்­கையை மஹிந்த ஏற்­க­வேண்டும்! -ல­க் ஷ் மன் கிரி­யெல்ல

395 0

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை முன்­னெ­டுத்து செல்­வ­தற்கு ஒத்­து­ழைக்­கு­மாறு எதிர்க்­கட்சி தலைவர் இரா.சம்­பந்தன் நேர­டி­யாக நேற்று சபையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­விடம் வலி­யு­றுத்­தினார். எனவே, இதுதான் இறுதி சந்­தர்ப்­ப­மாகும். ஆகையால்  கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக தேசி­யப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காண ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க் ஷ் மன் கிரி­யெல்ல சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று நடை­பெற்ற 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­திட்­டத்தில் ஜனா­தி­பதி, பிர­தமர், ஆணைக்­கு­ழுக்கள், திணைக்­க­ளங்கள் ஆகி­ய­வற்­றுக்­கான ஒதுக்­கீ­டுகள் மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­னா­லேயே எதிர்க்­கட்சி ஒரு­வ­ருக்கு கோப்­குழு தலைமை பதவி வழங்­கப்­பட்­டது. முன்­னைய ஆட்­சியின் போது அர­சாங்­கத்தை பிர­தி­நி­தித்­துவம் செய்­ப­வர்­களே கோப்­கு­ழுவின் தலைமை பத­வியை வகித்­தனர். எனினும் நல்­லாட்­சியில் எதிர்க்­கட்சி சார்­பாக மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­னெத்­தியை நிய­மித்தோம். எனினும் நான் அவரை பாராட்­டு­கின்றேன். அவர் தனது காரி­யங்­களை உரிய முறையில் செய்­துள்ளார். அதனை பாராட்ட வேண்டும்.

அத்­துடன் தற்­போது ஆணைக்­கு­ழுக்கள் சுயா­தீ­ன­மில்லை என்று கூற முடி­யாது. ஏனெனில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ  அர­சி­ய­ல­மைப்பின் 18 ஆவது திருத்­தத்தின் ஊடாக அனைத்து அதி­கா­ரங்­க­ளையும் தன்­வசம் பெற்­றுக்­கொண்டார்.

அதே­போன்று தற்­போது நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஊடாக பாரா­ளு­மன்­றத்தை பலப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­படி கண்­கா­ணிப்பு குழுக்­களை நிய­மித்தோம். முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க, மஹிந்த ராஜ­பக் ஷ ஆகி­யோரின் காலத்தில் பாரா­ளு­மன்ற கண்­கா­ணிப்பு குழுக்­களில் ஆளும் ­கட்­சி­யி­னரே இருந்­தனர். எனினும் நாம் எதிர்க்­கட்­சி­யி­னரை நிய­மித்தோம். இதன்­படி  அனைத்து கட்­சி­க­ளுக்கும் பொறுப்­பு­களை  வழங்­கி­யுள்ளோம். ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் பல பாரா­ளு­மன்­றத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை ஒழிப்­ப­தற்கு மக்கள் ஆணை­யில்லை என்று எவ­ருக்கும் கூற முடி­யாது.ஐக்­கிய தேசியக் கட்சி தனது தேர்தல் மேடை­களில் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை ஒழிப்­ப­தா­கவே கூறி­யது. அதற்கே மக்கள் எமக்கு ஆணை வழங்­கி­யுள்­ளனர்.

மேலும் மனித உரிமை தொடர்பில் சர்­வ­தேச அளவில் நாம் அடி­மைப்­பட்டு இருந்தோம். எனினும் நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த போது மீண்டும் சர்­வ­தேச ஆத­ர­வினை அதி­க­ரித்­துள்ளோம். சர்­வ­தேச ஆத­ரவு இருக்கும் போதே தேசிய பிரச்­சி­னையை தீர்க்க வேண்டும். எதிர்க்­கட்சி தலைவர் இரா. சம்­பந்தன் மஹிந்த ராஜ­ப­க் ஷ­விடம் பகி­ரங்க கோரிக்கை விடுத்தார். யுத்தம் நிறைவு பெற்ற பின்னர் மஹிந்த ராஜ­ப­க் ஷவே முதலில் அதி­கா­ர­ப­ர­வ­லாக்கம் பற்றி கூறினார். இந்­தி­யா­வுக்கு சென்று உறு­தி­ய­ளித்தார். தெரி­வு­க் குழு நிய­மித்தார். எனினும் அப்போது தமிழ் தலைவர்கள் அவருக்கு ஆதரவு வழங்கவில்லை. எனினும் தெரிவுக் குழு

வினை நியமித்திருந்தால் நாம் ஆதரவு வழங்கியிருப்போம். மஹிந்தவே முதலில் அரசியலமைப்பின்  13 ஆவது திருத்தச்சட் டத்தின் அதிகாரம் குறைவு என கூறினார். எனவே சம்பந்தனின் கோரிக்கைக்கு அமையகூட்டு எதிரணி ஒத்துழைப்பு வழங்க வேண் டும் என்றார்.

Leave a comment