எம்மை திருடர்கள் எனக்கூறிக்கொண்டு அரசில் இருப்பவர்களே திருடுகின்றனர்-மஹிந்த

952 0

எங்­களை திரு­டர்கள் என தெரி­வித்­துக்கொண்டு அர­சாங்­கத்தில் இருப்­ப­வர்­களே திரு­டு­கின்­றனர். அத்­துடன் பிணை­முறி தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தின் நம்­பிக்­கைக்கு துராேகம் செய்­துள்­ளனர் என முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார்.

முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்­வரின் ஞாப­கார்த்த நிகழ்வு நேற்று கொழும்பு இலங்கை மன்­றக்­கல்­லூ­ரியில் இடம்­பெற்­றது. நிகழ்வில் அதி­தி­யாக கலந்­து­கொண்­டதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

மத்­திய வங்கி பிணை­முறி மோச­டி­யா­ளர்கள் யார் என்­பது தற்­போது வெளியில் வர ஆரம்­பித்­துள்­ளது. பிர­பல அமைச்­சர்கள் அதில் தொடர்பு பட்­டி­ருக்­கின்­றனர். அத்­துடன் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மீது நம்­பிக்­கை­வைத்தே பாரா­ளு­மன்ற கோப் குழு அமைக்­கப்­ப­டு­கின்­றது. அவர்கள் அந்த நம்­பிக்­கைக்கு துரோகம் செய்­துள்­ளனர்.

மேலும் எங்­க­ளுக்கு திருடர் என தெரி­வித்­துக்­கொண்டு அர­சாங்­கத்தில் இருக்கும் அமைச்­சர்கள் இன்று திரு­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். திரு­டர்கள் எப்­போதும் அடுத்­த­வர்­களை திரு­டர்கள் என்று சொல்­லிக்­கொண்­டுதான் திரு­டு­வார்கள். அத்­துடன் இவர்கள் திரு­டு­வது போன்று யாரும் திரு­டி­ய­தில்லை. எங்­கள்­மீது சேறு பூசு­வ­தற்கே எங்­களை திரு­டர்கள் என்று தெரி­விக்­கின்­றனர்.

அத்­துடன் நாங்கள் நாட்­டுக்கு செய்த சேவைகள் கண்­க­ள் காண இருக்­கின்­றன. ஆனால், இந்த அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வந்து இவ்­வ­ளவு காலத்­துக்கும் எதனை செய்­தது. அவர்கள் செய்த எதுவும் இல்லை.  தொலை­பேசி உரை­யா­டல்­களை ஒட்டுக்­கேட்­ப­தனை நாங்கள் வன்­மை­யாக எதிர்க்­கின்றோம். அவ்­வாறு யாருக்கும் செய்­ய­மு­டி­யாது. அத்­துடன் தற்­போது நாட்டில் தனி மனித சுதந்­திரம் இல்­லா­ம­லாக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் தொலைபேசியை ஒட்டுக் கேட்பது தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் கதைத்தேன். அது தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார் என்றார்.

Leave a comment