டிசம்பர் 11 முதல் 14 வரை வேட்பு மனு­தாக்கல் ; ஜனவரியில் தேர்தல்

8461 0

உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்­கோரும் அறி­வித்தல் எதிர்­வரும் 27 ஆம் திகதி விடுக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி நண்­பகல் வரையில் வேட்பு மனுக்­களை பொறுப்­பேற்­ப­தற்கு  சுயாதீன தேர்­தல்கள் ஆணைக்­குழு தீர்­மா­னித்­துள்­ள­தாக அதன் தலைவர்  மஹிந்த தேசப்­பி­ரிய  அறி­வித்தார்.

சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் இது தொடர்­பான கூட்டம் நேற்று காலை 9.30 முதல் பிற்­பகல் 12.30 வரையில்

தேர்­தல்கள் செய­ல­கத்தில் நடை­பெற்­றது. அதன்­போதே இத்­தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும்  மஹிந்த தேசப்­பி­ரிய குறிப்­பிட்டார். . அதன்­படி  எதிர்­வரும் ஜன­வரி மாதம் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது.

சுயாதீன் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் நேற்­றைய கூட்டம் நிறை­வ­டைந்த பின்னர் தேர்­தல்கள் செய­ல­கத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்ட சுயா­தீன தேர்­த­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேஷ­பி­ரிய மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்­ப­மாகும் வாரத்தில்  உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்­களை பொறுப்­பேற்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக நாம் ஏற்­க­னவே தெரி­வித்­தி­ருந்தோம்.  எனினும் வேட்­பு­ம­னுக்­கோரும் அறி­வித்­தலை எதிர்­வரும் 27 ஆம் திகதி விடுப்­ப­தற்கு சுயாதீன் தேர்­தல்கள் ஆணைக்­குழு இன்று (நேற்று) தீர்­மா­னித்­துள்­ளது.

அதற்­கி­ணங்க அவ்­வ­றி­வித்தல் வெளி­யி­டப்­பட்டு 14 நாட்கள் கடந்த பின்னர் வேட்பு மனுக்­களை தாக்கல் செய்யும் காலம் ஆரம்­ப­மா­வ­துடன், குறித்த நவம்பர் மாதம் 27 ஆம் திக­தி­யி­லி­ருந்து 17 ஆவது நாளுக்கு அடுத்த நாள் நண்­ப­க­லுடன் அக்­கா­லக்­கெடு நிறை­வ­டை­ய­வுள்­ளது.

எனவே அந்­தந்த மாவட்­டங்­களின் தெரி­வத்­தாட்சி   அதி­காரி அல்­லது அவ்­வவ்­மன்­றங்­களின் தெரி­வத்­தாட்சி அதி­கா­ரி­க­ளான மாவட்ட உதவி தெரி­வத்­தாட்சி   அதி­கா­ரி­க­ளினால் குறித்த வேட்­பு­ம­னுத்­தாக்கல் தொடர்­பான அறி­வித்தல் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது. ஆகவே  அதி­கா­ரி­களை அடை­யா­ளப்­ப­டுத்தும் வர்த்­த­மானி அறி­வித்தல் இன்று (நேற்று) வெளி­யி­டப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

இதே­வேளை உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பத­விக்­காலம் நிறை­வ­டைந்து இரு வரு­டங்கள் கடந்­துள்ள நிலையில், எல்லை நிர்­ணயம் உள்­ளிட்ட கார­ணங்­களை அடிப்­ப­டை­யாக்க கொண்டு தேர்தல் காலம் தாழ்த்­தப்­பட்டு வந்­தது.

எனினும் அதற்­கான பணிகள் நிறை­வு­செய்­யப்­பட்­ட­துடன் கடந்த முதலாம் திகதி உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் தொடர்­பான வர்த்­த­மா­னியில் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்­சி­மன்ற அமைச்சர் பைஸர் முஸ்­தபா கைச்­சாத்­திட்டு அர­சாங்க அச்சுத் திணைக்­க­ளத்­திற்கு அனுப்­பி­வைத்தார். எனினும் அவ்­வர்த்­த­மானி கடந்த 11 ஆம் திக­தியே வெளி­யி­டப்­பட்­டது.

ஆகவே வெளி­யி­டப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் குறித்த வர்த்­மா­னியில் நான்­கா­யி­ரத்து எண்­ணூற்று  நாற்­பது தொகு­திகள் வகுக்­கப்­பட்­டுள்­ள­துடன் 341 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அவ்­வுள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு எண்­ணா­யி­ரத்து முன்­னூற்று ஐம்­பத்­தாறு உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

இதே­வேளை இறு­தி­யாக விகி­தா­சார முறையில் நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் போது நாட்டில் முன்­னூற்று முப்­பத்­தைந்து உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் இருந்­த­துடன் அம்­மன்­றங்­க­ளுக்கு நான்­கா­யி­ரத்து நானூற்று எண்­பத்­தாறு உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­பட்­டனர்.

ஆகவே புதிய கலப்பு தேர்தல் முறை­யூ­டாக நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் கடந்த தேர்­த­லை­விட ஆறு உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மேல­தி­க­மாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அதற்­கி­ணங்க அக­ர­ப­தன, கொட்­ட­கல, மஸ்­கெ­லிய, நோர்வூட், பொல­ந­றுவை ஆகிய பிர­தேச சபைளும் பொல­ந­றுவை மாநா­கர சபை­யுமே புதிய உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

தற்­போது நாட்டில் மொத்­த­மாக இரு­நூற்று எழு­பத்­தாறு பிர­தேச சபை­களும், 24 மாந­கர சபை­களும், நாற்­பத்­தொரு  நகர சபை­களும்  உள்­ளன.

தேர்தல் விதி­மு­றை­க­ளுக்கு ஏற்ப உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்குத் தெரி­வு­செய்­யப்­பட வேண்­டிய உறுப்­பி­னர்கள் மற்றும் உள்­ளு­ராட்­சி­மன்­றங்­களின் எண்­ணிக்கை உள்­ள­டங்­க­லான பணி­களை அர­சாங்கம் பூர்த்­தி­செய்து அதனை வர்த்­த­மானி மூலம் அறி­வித்தால்  அதற்குப் பின்­ன­ரான பணி­களை மேற்­கொள்ளும் பொறுப்பு சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விற்குச் செல்­கி­றது.

அதற்­கி­ணங்­கவே சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நேற்று கூடி ஆராய்ந்ததுடன் வேட்புமனுத்தாக்கல் செய்யும் திகதியையும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை  உள்ளூராட்சிமன்றங்களுக்கான எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறுகோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும் குறித்த வழக்கை விசாரிப்பதா அல்லது நிராகரிப்பதா என்பது தொடர்பிலான தீர்ப்பு எதிர்வரும் 22ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment